மத்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கெடா மந்திரி புசார் சனுசி முகமட் நூர் புகார் தெரிவித்துள்ளார்.
வரும் மே மாதம் கெடா, லங்காவியில் நடைபெறவிருக்கும் லீமா எனப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான லங்காவி அனைத்துலக கடல் மற்றும் ஆகாய கண்காட்சி உட்பட மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலிருந்து தாம் தடுக்கப்படுவதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவை தமக்கு எதிராக இந்த முடிவைச் செய்துள்ளதாக சனூசி குற்றஞ்சாட்டினார்.