கடந்த பிப்ரவரி மாதம், உடன் இருந்த கைதியைக் கொன்றதற்காக, 34 வயதுடைய முகமட் ஃபஹ்ருர் ராட்ஸி சாஹத் என்ற கைதி இன்று மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, பிற்பகல் 2.15 மணியளவில் சுங்கை ஊடாங் சிறைச்சாலையில், பைடி அத்மோக் சுகர் என்ற ஓர் இந்தோனேசிய கைதியை, கொலை செய்ததாக முகமட் ஃபஹ்ருர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.