முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வுச் செய்வதா? இல்லையா? என்பது குறித்து கூட்டரசு நீதிமன்றம் நாளை வெள்ளிக்கிழமை முடிவு செய்யவிருக்கிறது.
சபா, சரவா தலைமை நீதிபதி அப்துல் ரஹ்மான் தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு, காலை 10 மணியளவில் தனது தீர்ப்பை வழங்கவிருக்கிறது. அதற்கு முன்னதாக, நஜீப் தரப்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் டான் ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா மற்றும் அரசு தரப்புக்குத் தலைமையேற்றுள்ள துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ வி. சிதம்பரம் ஆகியோர் தங்களின் கனம் பொருந்திய வாதத் தொகுப்புகளைச் சமர்ப்பிக்கவிருக்கின்றனர்.
தமக்கு விதிக்கப்பட்டுள்ள 12 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்வதில் நஜீப் தோல்விக் காண்பாரேயானால் 69 வயதான அந்த முன்னாள் பிரதமர், மாமன்னரிடமிருந்து பொது மன்னிப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து காஜாங் சிறையில் தண்டனை அனுபவிக்க நேரிடும்.
இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை கூட்டரசு நீதிமன்றத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், நஜீப்பின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆகக்கடைசியான சட்டப் போரட்டம் இதுவாகும்.