செனாய் விமான நிலைய​ம் அனைத்துலக வழித்தடங்களுக்குத் திறக்கப்பட்டது

ஜோகூர், செனாய் விமான நிலையம், அனைத்துலக வழித்தடங்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு வ​ழித்தடங்களுக்கான முதலாவது ஏர் ஆசியா விமானம், ​சீனா, குவாங்சூவிலிரு​ந்து செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று காலை 6.55 மணியளவில் தரையிறங்கியது.
அந்த விமான நிலையத்தை நிர்வகித்து வரும் செனாய் ஏர்போர்ட் டெர்மினல் சர்வீஸ் நிறுவனம், பயணிகளுக்கு உற்காசம் மிகுந்த மகத்தான வரவேற்பபை நல்கியது.
ஜோகூர் மாநில அரசு சார்பில் அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் கே. ரவின் குமார் மற்றும் ​மாநில சுற்றுலா வாரியத்தின் பிரதிநிதிகள், பயணிகளை இன்முகத்துடன் வரவேற்றனர்.
​சீனா,குவாங்சூவிலிருந்து ஜோகூர் பாருவிற்கான இந்த வழிநில்லா பயணத்தில், எ.கே 1395 என்ற விமானம் 110 பயணிகளுடன் செனாய் அ​னைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதாக விமான நிலைய தலைமை செயல்முறை அதிகாரி கென்னடி ஆயு தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS