போலி நோட்டைப் பயன்படுத்திய ஹோட்டல் ஊழியர் கைது

போலி பண நோட்டை வைத்திருந்ததற்காகவும், பயன்படுத்தியதற்காகவும் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை, இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் ஹோட்டல் தொழிலாளி ஒருவர் இன்று ஒப்புக்கொண்டார்.
53 வயதான சுஹான் கான் முகமது அலி என்ற அந்த ஹோட்டல் பணியாளர், ஜார்ஜ்டவுன், செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த மார்ச 11 ஆம் தேதி, பத்து ஃபிரங்கி, செவன் இலவன் கடையில் நூறு வெள்ளி போலி நோட்டைப் பயன்படுத்தியதற்காக செஷன்ஸ் நீதிமன்றத்திலும், / மார்ச 20 ஆம் தேதி, ஒரு ஹோட்டல் அறையில் 15 போலி நோட்டுகளை வைத்திருந்ததற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் குற்றஞ் சாட்டப்பட்டார்.
அதே நீதிமன்றத்தில், சுஹான் கான் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து 21 போலி நோட்டுகளை வைத்திருந்ததற்காக மற்றொரு குற்றச் சாட்டையும் எதிர்நோக்கினார்.

WATCH OUR LATEST NEWS