கூட்டரசு அரசாங்கம் ஏற்பாடு செய்யக்கூடிய அதிகாரத்துவ நிகழ்சிகளில், தாம் கலந்துகொள்வதற்கு எழுத்துப் பூர்வமான தடை விதிக்கப்பட்டுள்ளதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவை வெளியிட்டுள்ள எழுத்துப் பூர்வமான கடிதத்தைக் கெடா மந்திரி பெசார் அலுவலக அதிகாரி ஒருவர், நேரடியாக பார்த்திருப்பதாக சனுசி குறிப்பிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டை வெறுமனே தாம் முன்வைக்கவில்லை என்றும் / எழுத்துப் பூர்வமான கடிதத்தைத் தமது அதிகாரி நேரடியாக பார்த்தப் பின்னரே இதனை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு ஏற்பட்டதாகவும் சனுசி விளக்கினார்.