நிபந்தனைகளைப் பற்றி எனக்குத் தெரியாது

கட்சி விட்டு கட்சி மாறினால், ஒரு கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பிகேஆர் கட்சி விதித்துள்ள நிபந்தனைக் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரைடா கமாருடீன் கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாள், ஒரு பாரத்தை வழங்கி தம்மை கையெழுத்திட சொன்னதால் அந்தப் பாரத்திலுள்ள உள்ளடக்கத்தைத் தாம் படிக்கவில்லை என்றும், தமக்கு விளக்கப்படவில்லை என்றும் 65 வயதுடைய முன்னாள் அமைச்சரான சுரைடா குறிப்பிட்டார்.

அம்பாங் எம்.பி. யாக இருந்தப்போது பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பெர்சத்துவில் இணைந்தது தொடர்பில், ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கேட்டுத் தமக்கு எதிராக அக்கட்சித் தொடுத்துள்ள வழக்கில் சாட்சியம் அளிக்கையில் சுரைடா இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS