புனித நோன்பு மாதத்தில் நோன்புக் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களுக்கு உணவை விற்பனை செய்த குற்றத்திற்காக 49 வயது மாதுவிற்கு இரண்டாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இன்று கிளந்தான், கெதெரே மாவட்ட மன்றத்திற்கு உட்பட்ட ஆறு பகுதிகளில் மாநில சமய இலாகா மேற்கொண்ட சோதனையில், நோன்புக் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களுக்கு 20 முதல் 30 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயார் நிலையில் இருந்த அந்த மாது பிடிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.