B40, M40 தரப்பை சேர்ந்த வங்கி ஊழியர்களுக்கான விழா கால உதவித் தொகை நிராகரிப்பு மனித வள அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்

புத்ராஜெயா, மார்ச்,23.

பண்டிகை காலம் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில் நாடு முழுவதும் B40, M40 தரப்பைச் சேர்ந்த 15 ஆயிரம் வங்கி ஊழியர்களுக்கான உதவித்தொகையை வங்கிகள் நிராகரித்து இருப்பது மூலம் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் உடனடியாக தலையிட வேண்டும் என்று தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான NUBE கேட்டுக்கொண்டுள்ளது.

15 ஆயிரம் வங்கி ஊழியர்களின் விழா கால உதவித்தொகை கோரிக்கையை வங்கிகள் நிராகரித்து இருப்பது மூலம் அந்த ஊழியர்களை சார்ந்துள்ள 50 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று NUBE பொதுச் செயலாளர் ஜே. ஸோலோமன் தெரிவித்தார்.

வங்கி ஊழியர்களுக்கு விழா கால உதவித் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று NUBE முன்வைத்த கோரிக்கையை ஆதரித்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பென்டாங், ஜெலூடோங், கோலா கிராய் மற்றும் சுங்கை பெதானி ஆகிய நாடாளுன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருப்பதை சோலமன் சுட்டிக்காட்டினார்.

NUBE க்கும், வங்கி நிர்வாகங்களுக்கும் இடையிலான இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், மத்தியஸ்தராக செயலாற்ற வேண்டும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி இரு தரப்பினரும், மனித வள அமைச்சின் தொழிலியல் உறவு இலாகா வழி ஒரு சமரச உடன்பாடு காணப்படும் என்று அமைச்சர் ஸ்டீவன் லிம், நாடாளுமன்றத்தில் உறுதி அளித்து இருந்ததாக சோலமன் தெரிவித்தார்.

அதன்படி கடந்த மார்ச் 21 ஆம் தேதி நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண முடியவில்லை என்றும் தொழிலியல் உறவு இலாாகா அதிகாரிகள் வெறும் “ தபால்காரர்களை” போல் செயல்பட்டதுதான் மிச்சம் என்று சோலமன் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். .

விழா கால உதவித் தொகை விவகாரத்தை ஒத்திவைக்குமாறு வங்கிகள் கேட்டுக்கொண்டு இருப்பது, அவை இழுத்தடிப்பு போக்கை கையாளும் சாக்குப் போக்கு வேலையாகும்.

நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்து இருப்பதைப் போல இவ்விவகாரத்தில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் லிம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும், 15 ஆயிரம் வங்கி ஊழியர்களுக்கு பண்டிகை கால உதவித்தொகை கிடைப்பதற்கு விரைந்து விடியலை ஏற்படுத்த வேண்டும் என்று சோலமன் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்