ECRL திட்டம் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது

கோத்தா பாரு, ஏப்ரல் 23-

கிளந்தானில், கிழக்கு கரையோர ரயில் பாதை (ECRL) திட்டத்தின் கட்டுமானப் பணி கடந்த மார்ச் வரையில் 78.03 சதவீதம் முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீதம் அதிகரித்துள்ளதாக Malaysia Rail Link Sdn Bhd நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் இந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதுடன் திட்டமிட்டப்படி ECRL ரயில் திட்டம் விரைவில் முடிவடையும் என்று டார்விஸ் அப்துல் தெளிவுப்படுத்தினார்.

மேலும், கெபெங், பகாங்-கிலிருந்து டுங்குன், திரங்கானு-வரையில் ரயில் பாதை அமைக்கும் பணி 92 கிலோமீட்டரும், கெபெங்-கிலிருந்து பகாங்-வரையில் 97 கிலோமீட்டர் வரையில் முழுமை பெற்றிருப்பதாக அவர் இன்று விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்