KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் அடையாளம் காணப்பட வேண்டும்!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 –

சராவாக், கூச்சிங்-கிலுள்ள KK மார்ட் நிறுவன கடை ஒன்றின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில், போலீஸ் குற்றவாளியை விரைந்து அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட வேண்டுமென துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ பாடில்லா யூசோப் வலியுறுத்தினார்.

அதுவரையில், பொதுமக்கள் நிதானம் காப்பதோடு, அச்சம்பவம் குறித்து போலீஸ் உரிய விசாரணையை மேற்கொண்டு குற்றவாளியைப் பிடிப்பதற்கு வழிவிட வேண்டுமென பாடில்லா யூசோப் கேட்டுக்கொண்டார்.

சராவாக்-கிலுள்ள கிளை உட்பட கடந்த வாரத்தில் KK மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான 3 கடைகள் மீது இதுவரையில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, பேராக், பீடோர் மற்றும் பகாங், குவாந்தான்-னிலுள்ள KK மார்ட் கடைகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருந்தது.

”அல்லா” சொல் கொண்ட காலுறையை விற்பனை செய்ததற்காக அந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இனம் சமயம், பின்னனி புலம் முதலானவற்றைப் பார்க்காமல் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த கூச்சிங்-ங்கில் நிகழ்ந்துள்ள இந்த தாக்குதல் வருத்தமளிப்பதாக, DAP கட்சியைச் சேர்ந்த பண்டார் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் பண்டார் கூச்சிங் வருத்தம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்