KK மார்ட் வர்த்தகத்திற்கு எதிரான போராட்டத்தை டாக்டர் அக்மால் சாலெஹ் கைவிட வேண்டும்

அல்லா சொல் கொண்ட காலுறைகளை விற்பனை செய்த KK மார்ட் கடைகள் மீது கடும் கோபத்தில் இருக்கும் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முஹம்மது அக்மால் சாலெஹ்-வும் இஸ்லாமிய சமூகத்தினரும் அவர்களது போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

போதுமான அளவில் இஸ்லாமிய மக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்திவிட்டதால், இனியும் அவ்விவகாரத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என தனது கேளுவார் சேகெஜப் போட்காஸ்ட் கலந்துரையாடலில் கய்ரி ஜமாலுட்டின் வலியுறுத்தினார்.

KK மார்ட் கடைகள் மீதான தாக்குதல் நீடித்தால், அது சீன சமூகத்தின் மீது மலாய் சமூகமும் / மலாய் சமூகத்தின் மீது சீன சமூகமும் இனவாதமிக்க கருத்துகளை முன்வைக்க நேரிடும் என தாம் ஐயுறுவதாக அவர் கூறினார்.

சிறந்த பேச்சாளராக இருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இவ்விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்? இனங்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடிய சர்ச்சை ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை ஒரு வாய்ப்பாக கொண்டு, பிரதமர் அன்வார் மலேசியர்களை ஒன்றிணைக்க செய்திருக்க வேண்டும் என கய்ரி வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்