KLIA -வில் பாதுகாப்பினை அதிகரிப்பதை குறித்து விவாதிக்கப்படும்

கோலாலம்பூர், ஏப்ரல் 16-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் Malaysia Airports Holdings Bhd (MAHB) நிறுவனம் ஆகியவை KLIA -வில் பாதுகாப்பை மேம்படுத்துவதை குறித்து விரைவில் விவாதிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அதனுடன் ஒன்றிணைந்து போலீஸ் அதிகாரிகளும் செயல்படுவதாக கூறிய அவர் இதுக்குறித்து ஆலோசிக்கவும் விவாதங்களை மேற்கொள்ளவும் அவர்களின் பொறுப்பிலேயே விட்டுவிடுவதாக அந்தோணி லோக் பரிந்துரைத்தார்.

விமான நிலையத்தில் SOP செயல்பாடுகளில் கடினமாகவும் கட்டுப்படுத்தும் வகையில் சில மாற்றங்களை அமைப்பதற்கு அதீத கவனம் செலுத்த வலியுறுத்துவதாக அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.

விமான நிலையத்தில் விதிமுறைகளை கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது போலீசாரை மட்டும் சார்ந்திருக்காமல் அவ்விடத்தில் பணிப்புரியும் பாதுகாவலர் அதிகாரிகளையும் சார்ந்திருப்பதாக அவர் நினைவுக் கூர்ந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்