May 21, 2026
Thisaigal NewsYouTube
லிம் கிட் சியாங்கிடம் விசாரணை, ஹசான் கரிம் வருத்தம்
தற்போதைய செய்திகள்

லிம் கிட் சியாங்கிடம் விசாரணை, ஹசான் கரிம் வருத்தம்

Share:

மலாய்க்காரர் அல்லாத ஒருவர், மலேசியாவின் பிரதமராக வர முடியும் என்று கூறியுள்ள டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை விசாரணை செய்யும் போலீசாரின் நடவடிக்கை குறித்து பசிர் குடாங் எம்.பி., ஹாஸ்ஸான் அப்துல் கரிம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

லிம் கிட் சியாங் அவ்வாறு கூறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தாம் கருதவில்லை என்று ஹாஸ்ஸான் கரிம் குறிப்பிட்டார்.

மலாய்க்காரர் மட்டுமே நாட்டின் பிரதமராக வர முடியும் என நாட்டின் அரசிலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்று ஹாஸ்ஸான் கரிம் விளக்கினார்.

தாம் ஒரு மலாய்க்காரர், ஒரு மலேசியர் என்று குறிப்பிட்ட ஹாஸ்ஸான் கரிம், ஒரு வழக்கறிஞராகவும், வழக்குரைஞராகவும் இருப்பதால் அரசியலமைப்பு

சட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூற முடியும் என்றார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 43 ஆவது பிரிவு, 2 ஆவது ஷரத்தின்படி மலேசியராக இருக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் பிரதமராக வர முடியும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், இனத்தை அல்லது சமயத்தை அடிப்படையாக கொண்டு பிரதமராக வரக்கூடியவரை நாம் கருத்தில் கொள்கிறோம் என்று ஹாஸ்ஸான் கரிம் தெளிவுபடுத்தினார்.

பிரதமராக வருவதற்கு மூன்று நிபந்தனைகளை மட்டுமே அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. பிரதமர் வேட்பாளர் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவை பெற்று இருக்க வேண்டும், இதற்கு மேலாக மாமன்னரின் அங்கீகாரத்தை பெற்று இருக்க வேண்டும்.

இந்த மூன்றையும் நிறைவு செய்யக்கூடிய ஒருவர் நாட்டின் பிரதமராக வர முடியும் என்று ஹாஸ்ஸான் கரிம் விளக்கினார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை