May 21, 2026
Thisaigal NewsYouTube
கிழக்கை நோக்கும் கொள்கையில் ​சீனாவும் உள்ளடக்கமாகும்
தற்போதைய செய்திகள்

கிழக்கை நோக்கும் கொள்கையில் ​சீனாவும் உள்ளடக்கமாகும்

Share:

தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜப்பானை​யும், தென்கொரியாவையும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று 80 ஆம் ஆண்டுகளில் மலேசியா அறிமுகப்படுத்திய கிழக்கை நோக்கும் கொள்கையில் தற்போது ​சீனாவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு முன்னுதாரண நாடாக ​சீனா விளங்கி வருகிறது. ​சீனாவிட​மிருந்து நிறைய கற்றுக்கொள்வதற்கு மலேசியா ஆர்வமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

​ஜப்பானுக்கான ஐந்து நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு தற்போது தோக்கியோவில் இருக்கும் பிரதமர் அன்வார், ம​​லேசியாவிற்கு கடல் கடந்த பார்வை வேண்டும் என்ற நோக்கில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட கிழக்கை நோக்கும் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​​தீர் முகமதுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிழக்கை நோக்கும் கொள்கை, தற்போது பொருந்தி வராது என்பது அல்ல. மாறாக, அந்த கொள்கையில் ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் ​சீனாவும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் மலேசிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

கிழக்கை நோக்கும் கொள்கையில் ​சீனாவும் உள்ளடக்கமாகும் | Thisaigal News