May 21, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை சீரமைப்பில் 7 எதிர்பாராத விவகாரங்கள்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவை சீரமைப்பில் 7 எதிர்பாராத விவகாரங்கள்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிம் இன்று அறிவித்துள்ள அமைச்சரவை மாற்றத்தில் 7 எதிர்பாராத விவகாரங்கள் நடந்துள்ளன.

அமைச்சரவை சீரமைப்பில் சில விவகாரங்கள் எதிர்பார்க்கக்கூடியவை அல்லது நடக்கக்கூடியவை என்றாலும் யாருமே கணிக்க இயலாத 7 முக்கிய விவகாரங்களை பிரதமர் அன்வார் மேற்கொண்டுள்ளார்.

இதுநாள் வரை செயல்பட்டு வந்த இரண்டு அமைச்சுகள் தற்போது நான்கு அமைச்சுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு ஆகும்.
தற்போது தொடர்புத்துறை அமைச்சு மற்றும் இலக்கவியல் அமைச்சு என இரண்டு வெவ்வேறு அமைச்சுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் செயல்பட்டு வந்த டத்தோஸ்ரீ அன்வார், இரண்டாவது நிதி அமைச்சர் பதவியை உருவாக்கியுள்ளார்.

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் , தற்போது துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எம். குலசேகரன் மற்றும் டத்தோ ஶ்ரீ நோரைனி அஹ்மாட் ஆகியோருக்கு துணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது துணை நிதி அமைச்சராக இருந்த ஸ்தீவன் சிம்மிற்கு வி. சிவகுமார் வகித்து வந்த மனித வள அமைச்சர் பதவியை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு நெருக்கமான முன்னாள் துணை நிதி அமைச்சர் டத்தோ அஹ்மாட் மஸ்லான், பொதுப் பணி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோவின் பலம் பொருந்திய வேட்பாளராக கருதப்பட்ட அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடினை தோற்கடித்து, பிகேஆர் கட்சிக்கு வலிமை சேர்ந்த மித்ரா பணிக்குழுத் தலைவர் டத்தோ ஆர். ரமணன், தொழில் முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சராக பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.

நஜீப் அமைச்சரவையில் இரண்டாவது நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த அம்னோவின் த் எம்.பி. டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி மறுபடியும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை