May 21, 2026
Thisaigal NewsYouTube
மினி டாக்காவில் போலீசார் திடீர் சோதனை
தற்போதைய செய்திகள்

மினி டாக்காவில் போலீசார் திடீர் சோதனை

Share:

கோலாலம்பூர் மாநகரில் மினி டாக்கா என்று அழைக்கப்படும் ஜாலான் சிலாங் – கில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக போலீசார் இன்று காலையில் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உள்துறை அமைச்சு மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் கீழ் உள்ள கலாட் படை உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களும், அதிகாரிகளும் மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கை காலை 11 மணியளவில் புடு விற்கு அருகில் தொடங்கியது.

ஆயுதம் தாங்கிய போலீசார் ஜாலான் சிலாங்- ங்கில் உள்ள ஒரு கட்டடத்தின் நான்கு தொகுதிகளில் அதிரடியாக களம் இறக்கப்பட்டனர். . .

பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்ற இந்த சோதனை நடிவடிக்கையில் சட்டவிரோதக் குடியேறிகள் என்று நம்பப்படும் வங்காளதேசம், நேபால், மியன்மார் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 101 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்டவர்கள் அனைவரும் லோரிகள் மூலம் ஏற்றப்பட்டு கோலாலம்பூர், போலீஸ் பயிற்சி மையமான PULAPOL- லில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி