May 21, 2026
Thisaigal NewsYouTube
பொய்ச் செய்திகளை தடுப்பதற்குமான முயற்சி வலுப்படுத்தப்படுகிறது – தியோ
தற்போதைய செய்திகள்

பொய்ச் செய்திகளை தடுப்பதற்குமான முயற்சி வலுப்படுத்தப்படுகிறது – தியோ

Share:

தொடர்பு அமைச்சின் கீழ் தற்போது செயல்படும் சமூகத் தொடர்புத் துறை அல்லது ஜே-கோம் (J-KOM), அரசாங்க முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், தவறான செய்திகளின் ஊடுரவலை எதிர்த்துப் போராடுவதற்குமான முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பலன் கொடுக்கும் அரசாங்க திட்டங்கள், உதாரணமாக மடானி மருத்துவத் திட்டம் போன்ற நல்ல முயற்சிகள் மேலும் ஜே-கோம் வழி கொண்டு சேர்க்கப்படும் என தியோ நீ சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

"இந்த மடானி மருத்துவத் திட்டத்தின் கீழ் சிறிய நோய்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலவச சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்கியுள்ளோம். இது நல்ல ஒரு பலன் கொடுக்கும் திட்டம். இருப்பினும், இந்த முயற்சியைப் பற்றி தெரியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

"மற்ற அமைச்சுகளின் திட்டங்களையும், அதன் முன்முயற்சிகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதன் வழி, அதிகமான மக்கள் பயனடைவார்கள்," என்று சரவாக், கூச்சிங்கில் தொடர்பு அமைச்சின் கீழ் செயல்படும் அரசாங்கத் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலைந்துரையாடலுக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

நல்ல பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி , தொடர்பு துறைச் சார்ந்த சிக்கல்களுக்கு பதிலளிப்பதும் இதில் முக்கியமானது என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ கூறினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்