PADU-வில் குறைவான பதிவு, மலாய் அல்லாதவர்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22.

நாட்டின் முதன்மைத் தரவு தளமான PADU-வில் மலாய் அல்லாதவர்களில் குறைவானவர்களே பதிவு செய்துள்ளது பக்காத்தான் ஹராப்பான் மீது அத்தரப்பினர் கொண்டுள்ள ஆதரவைக் காட்டுவதாக பொருள்படாது.

அக்கூட்டணி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள அந்த திட்டத்தை, மலாய் அல்லாதவர்கள் பொருட்படுத்தவில்லை என்றே கருத வேண்டுமென மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஹ்மத் பௌசி அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

இதற்கு முந்தைய அரசாங்கம், மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததாக கருதப்பட்டாலும், ஆட்சி புரியும் கட்சி அல்லது கூட்டணிகளைக் கருத்தில் கொள்ளாமல், மலாய் அல்லாதவர்கள் அரசாங்கத்தின் மீது சந்தேகங்களைக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

மலாய்க்காரர் அல்லாதவர்கள் PADU-வில் அதிகமாக இணைய செய்வதற்கு, அத்திட்டத்திற்கான பதிவு நடவடிக்கையை இதர மொழிகளிலும் மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மலாய் அல்லாதவர்களுக்கு அதிக முன்னுரிமையை அளிப்பதாக முன்வைக்கப்படக்கூடிய விமர்சனங்களையும் எதிர்கொள்ள தயாராக வேண்டுமென அஹ்மத் பௌசி அப்துல் ஹமீத் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்