PADU-வில் விடுபட்ட விவரங்களை நிகழ்நிலைப்படுத்த முடியும்

கோலாலம்பூர், ஏப்ரல் 02 –

நாட்டின் முதன்மைத் தரவுத்தளமான PADU-வில் பதிவதற்கான காலவரையறை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதால், புதிதாக எவரும் பதிவு செய்ய முடியாது.

அக்காலக்கட்டத்திற்குள் பதிந்துக்கொண்ட தனிநபர்கள் மட்டுமே, பதிவு நடவடிக்கையின் போது தங்களின் விடுபட்ட விபரங்களை அந்த தளத்தில் சேர்த்துக்கொள்ள முடியும் என புள்ளி விவரத்துறையின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் மோஹட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

இன்னும் சிலர் தங்களது சுய விவரங்களை உறுதி செய்யும் முறையில் தோல்வி கண்டுள்ளனர். அத்தரப்பினர் விரைந்து அவர்களது சுயவிவரங்களை அனுப்புவதற்கு அல்லது பூர்த்தி செய்வதற்கான உதவிகளை PADU குழுவினர் வழங்கி வருவதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் மோஹட் உசிர் மஹிடின் கூறினார்.

இதுவரையில், 18 வயதுக்கும் குறைவான குடும்ப உறுப்பினர்கள் உட்பட 58.7 விழுக்காட்டினர் அதாவது 17.65 மில்லியன் மலேசியர்கள் PADU-வில் பதிந்துக்கொண்டுள்ளதாக, பொருளாதார அமைச்சர் ரபிஜி ரம்லி இதற்கு முன்பு கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்