உலக அளவில் மக்கள் மத்தியில் அதிக நம்பகத்தன்மை கொண்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா இந்த ஆண்டு 7-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
அண்மையில் எடெல்மேன் டிரஸ்ட் பரோமீட்டர் ஆய்வின்படி, மலேசியாவின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை குறியீடு கடந்த ஆண்டின் 66 புள்ளிகளிலிருந்து 71 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. வணிகம், அரசாங்கம், ஊடகம் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மீது மலேசியர்கள் கொண்டுள்ள பலத்த நம்பிக்கையை இது காட்டுகிறது.
இருப்பினும், இந்த நம்பிக்கையானது தங்களுக்குப் பழக்கப்பட்ட சமூக மற்றும் கலாச்சார வட்டாரங்களுக்குள்ளேயே சுருங்கிப் போயிருப்பதாக இந்த அறிக்கை எச்சரிக்கிறது. தங்களுக்கு மாறுபட்ட கருத்துடையவர்கள் மீது மலேசியர்கள் மத்தியில் அவநம்பிக்கை நிலவுவதாகவும், தவறான தகவல் பரப்பல் குறித்த அச்சம் 73 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.








