May 20, 2026
Thisaigal NewsYouTube
பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

Share:

பண்டான் மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல், தேர்தல் ஆணையத்திற்கு (SPR) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமட் ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கடந்த மே 17 தேதி அவர்கள் இருவரும் பி.கே.ஆர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், கட்சி அமைப்பிலிருந்து அவர்களின் உறுப்பினர் தகுதி உடனடியாக நீக்கப்பட்டது.

இதன் காரணமாக, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன. இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்த இறுதி முடிவைத் தேர்தல் ஆணையமே எடுக்கும் என சபாநாயகர் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News