நாட்டில் நாளை முதல் ரோன்97 பெட்ரோல், மானியமில்லா ரோன்95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்கின்றன என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ரோன்97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 சென் உயர்ந்து நான்கு ரிங்கிட் 85 சென்னாக விற்கப்படும். அதேபோல, மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு இருபது சென் உயர்ந்து 4 ரிங்கிட் 7 சென்னாக விற்பனையாகும். உலகளாவிய எரிபொருள் விலை மாற்றங்களின் அடிப்படையில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.








