டி.எல்.பி எனப்படும் இரு மொழிபாடத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார். டி.எல்.பி பாடத் திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களிலும் தேவைகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
டி.எல்.பி வழிகாட்டல் முறைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல் முறையையே 100 விழுக்காடு தற்போது நடைமுறையில் இருப்பதாக ஃபத்லினா சிடெக் விளக்கினார்.








