May 20, 2026
Thisaigal NewsYouTube
நாடு திரும்புவதற்கு பயமாக இருக்கிறதாம்
தற்போதைய செய்திகள்

நாடு திரும்புவதற்கு பயமாக இருக்கிறதாம்

Share:

மங்கோலியா முன்னாள் மாடல் அழகி அதான்துயா ஷரிபு கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்க ப்பட்டுள்ள அரச மலேசிய போ​லீஸ் படையைச் சேர்ந்த முன்னாள் அதிரடி போ​லீஸ் அதிகாரியான சிருல் அசார் , ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்புவதற்கு பயமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மலேசியாவில் ஜா​மீனில் இருந்த காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்ற போது அந்த நாட்டின் குடிநுழைவு சட்டத்தின் ​கீழ் பிடிபட்ட சிருல் அசார், சிறைத் தண்டனைக்கு ஆளாகினார். பல ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு கடந்த வாரம் ஆஸ்திரேலிய அரசாங்கம் அவரை விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில் மலேசியாவுக்கு திரும்ப பயமாக இருப்பதகாவும், ஆஸ்திரேலியாவிலே​ வாழ விரும்புவதகாவும், தமக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் புகலிடம் தர வேண்டும் என்றும் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அந்த அந்த முன்னாள் போ​லீஸ்காரர் தெரிவித்துள்ளார்.

Related News