May 21, 2026
Thisaigal NewsYouTube
தூக்கிலிருந்து தப்பினார் வங்காளதேசத் தொழிலாளர்
தற்போதைய செய்திகள்

தூக்கிலிருந்து தப்பினார் வங்காளதேசத் தொழிலாளர்

Share:

கட்டுமான நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையாளரின் தலையை கோடாரியினால் வெட்டிக் கொன்ற வங்காளதேசத் தொழிலாளர் ஒருவர் தூக்குத் தண்டனையிலிருந்து இன்று தப்பினார்.

38 வயதான ஷொஹெல் என்ற அந்த வங்காளதேசத் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு பதிலாக 33 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 பிரம்படித் தண்டனையும் புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் விதித்தது.

அதேவேளையில் அந்த வங்காளதேசத் தொழிலாளி குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றவாளியே என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கன்டார் அபாங் ஹாஷிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி கோலசிலாங்கூர், ஜெராம், அலாம் ஜெயா- வில் உள்ள ஒரு கட்டுமானத்தளத்தில் தனது மேற்பார்வையாளரான 29 வயது பொலவுஸ் குமார் என்பவரை கோடாரியினால் வெற்றிக் கொன்ற குற்றத்தற்காக 2019 ஆம் ஆண்டு ஷா ஆலம் , உயர் நீதிமன்றம் அந்த வங்காளதேசத் தொழிலாளருக்கு தூக்குத் தண்டனை விதித்தது.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை