பகாங் மாநிலத்தில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் 160 மின்சார வாகன மின்னூட்ட நிலையங்களை நிறுவ இலக்கு கொண்டுள்ளது அம்மாநில அரசு. இந்த முன்னெடுப்பால், அதிகமான பகாங் மக்கள் மின்சார வாகனத்தை தேர்ந்தெடுப்பார்கள் என பகாங் மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
2025 வரை இலவச சாலை வரி, இறக்குமதி வரி போன்ற சலுகைகள் வழங்கப்படும் நிலையில் இவ்வாண்டு மின்சார வாகனங்களின் பயன்பாடு 4 மடங்காக அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது வரையில், சில மின்னூட்ட நிலையங்கள் இம்மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள நிலையில் கட்டம் கட்டமாக அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார் அவர்.
மின்சார வாகனங்கள் குறித்து மக்கள் கவலை கொள்ள வேண்டாம். அவற்றுக்குத் தேவையான மின்னூட்ட நிலையங்கள் தேவையான இடங்களில் நிறுவப்படும் என அவர் மேலும் சொன்னார்.
அதே சமயம், மாநில அரசின் அதிகாரப்பூர்வ வாகனமாக மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.








