May 20, 2026
Thisaigal NewsYouTube
நச்சுவாயுவை நுகர்ந்த மாது மரணம்
தற்போதைய செய்திகள்

நச்சுவாயுவை நுகர்ந்த மாது மரணம்

Share:

காரில் இருந்த போது மோனாக்சைடு நச்சு வாயுவை நுகர்ந்த இருக்கலாம் என்று நம்பப்படும் மாது ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று இரவு 10.17 மணியளவில் கிளந்தான், கோட்டா பாரு, ஜாலான் சுல்தான் இப்ராஹிம் எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்தது.

அந்த மாதுவுடன் காரில் இருந்த ஆடவரும் நச்சு வாயுவை நுகர்ந்து சுயநினைவு இழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ரோஸ்டி டாட் தெரிவித்தார்.

மிக ஆபத்ததான நிலையில் அந்த ஆடவர், கோத்தாபாரு, ராஜா பெரெம்புவான் ஜைனப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீளா துயரத்தை கருத்தில் கொண்டு இச்சம்பவம் குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று முகமட் ரோஸ்டி, பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related News