May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இதிஎஸ், கொம்யூட்டர் பயணச் சீட்டுக் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் - கேதிஎம்பி அறிவிப்பு

Share:

இரயில் தடங்களுக்கு அருகே கிரேன் கவிழ்ந்ததில் தடைபட்ட மின்சார ரயில் சேவை (ETS) பயணங்களை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளலாம் அல்லது இழப்பீட்டுத் தொகையைப் பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம் என கெதிஎம்பி அறிவித்துள்ளது.

இது குறித்து தகவல் தெரிவித்த கெதிஎம்பி இன் தலைமைச் செயல்முறை அதிகாரியான ரனி ஹிஷாம் சம்சுடின் தெரிவிக்கயில், பயணத்தை இரத்து செய்ய விரும்பும் பயனர்கள் பயணச் சீட்டுக் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அந்தத் தொகையைப் பயனர்களின் மின் பணப்பை இ வாலெட் WALLET கணக்கில் சேர்க்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
தண்டவாளத்தில் கிரேன் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூர் - தஞ்சோங் மாலிம் கொம்யூட்டர் பயணச் சேவை சுங்கை பூலோ வரை மட்டுமே செயல்படுவதாகவும், தஞ்சோங் மாலிம் - கோலாலம்பூர் கொம்பூட்டர் பயணச் சேவை செரெண்டா வரை மட்டுமே தற்பொழுது செயல்படுவதாகவும் ரனி ஹிஷாம் தெரிவித்தார்/

அதே சமயம், பாடாங் பெசாரில் இருந்து கெமாஸ் வரைக்குமான ETS பயணச் சேவை தஞ்சோங் மாலிம் வரை மட்டுமே தற்போது செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
தஞ்சோங் மாலிம் - இல் இருந்து சுங்கை பூலோவுக்கு பேருந்து சேவையை KTMB நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே, அங்கிருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத்தை கோலாலம்பூருக்கும் கெமாசுக்கும் தொடரலாம் என்றார் அவர்.

அதே போல் கெமாசில் இருந்து வடக்கு நோக்கி பாடாங் பெசாருக்குப் பயணம் செய்பவர்களுக்கும் சுங்கை பூலோவில் இருந்து தஞ்சோங் மாலிமுக்குப் பேருந்து சேவை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை