May 20, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் ஆடவர் மரணம்

Share:

சுங்கை பெட்டாணி, ஜாலான் லென்சோங் தீமோர் சாலையின் மஸ்ரா சமிக்ஞை விளக்கு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஓர் இந்திய ஆடவர் உயிரிழந்தார்.

நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 47 வயதுடைய பி.கணேசன் என்ற ஆடவர் தலையில் ஏற்பட்ட கடுங்காயங்களினால் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில், அவருடன் புரோட்டோன் சாகா காரில் பயணித்த அவரின் 9 வயது மகன் சொற்பக்காயங்களுடன் உயிர்த்தப்பியதாக Kuala Muda, மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ஸைடி ஷே ஹசான் தெரிவித்தார்.

அவ்விருவரும் பயணித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த, சாலையை மூடும் இரும்பு வேலியை மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஸைடி ஷே ஹசான் குறிப்பிட்டார்.

Related News