பேரா மாநில அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு நாளை நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 1.00 மணிக்கு தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றத்தின் ஸ்ரீ தஞ்சோங் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
முதல் முறையாக தென் பேராக், முவாலீம் மாவட்டத்தில் மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பேரா மாநில சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா - வும், அவரின் துணைவியாரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், டத்தோ , ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவனேசன் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவிருக்கும் இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பொது மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


