பத்து கேவ்ஸ் பகுதியில் உள்ள சிறார்கள் நலக் காப்பகத்தில் 8 மற்றும் 10 வயதுடைய இரு சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை மற்றும் இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் வன்கொடுமை இழைத்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 25 வயது காப்பகப் பொறுப்பாளர் வி. ரத்னா என்பவருக்கு அம்பாங், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 பிரம்படிகளும் விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக, குற்றவியல் சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் ரத்னா மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மேலும், சிறைக்காலத்தில் அவருக்குப் பாலியல் நடத்தைக்கான நல்லுரைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், தண்டனை காலம் முடிந்த பிறகு 2 ஆண்டுகளுக்குக் போலீஸ் துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி நாடியா மாலெக் ஃபவ்சி உத்தரவிட்டுள்ளார்.








