May 21, 2026
Thisaigal NewsYouTube
4 தங்கப்பதக்கங்களுக்கு குறி !
தற்போதைய செய்திகள்

4 தங்கப்பதக்கங்களுக்கு குறி !

Share:

அடுத்த ஆண்டு 2024இல் நடக்கவிருக்கும் பாராலிம்பிக் போட்டியில் மலேசியா 4 தங்கப்பதக்கங்களுக்குக் குறி வைத்துள்ளது என மலேசிய பாராலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ மெகாட் டி ஷஹ்ரிமான் சஹாருடின் குறிப்பிடுகயில், 4 தங்கப்பதங்களுக்கான இலக்கு என்பது அதிகாரப்பூர்வமானது அல்ல எனக் கூறும் அவர், அந்த இலக்கை அடைய போட்டியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இந்த ஆண்டு முழுவதும் விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் நான்கு தங்கங்கள் என்பது யதார்த்தமான எண்ணிக்கை என மெகாட் கூறினார்.

தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு 2,000 வெள்ளியும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 1,000 வெள்ளியும் வெண்கலப் பதக்கம் வென்றால் 500 பெள்ளியும் ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

Related News