எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிக்கும் முயற்சியில் மலேசிய பொது தற்காப்புப் படையின் கெடா மாநில இயக்குநர் லெப்டிணன்ட் கர்னல் அவாங் அஸ்கண்டார் அம்புவான் தாகோப் மரணம் அடைந்தார். 56 வயதான அவாங், நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி 12.45 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிப்பதற்கு இன்னும் 20 நிமிடமே எஞ்சியுள்ள வேளையில் கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தை கடந்த நிலையில் அவாங் மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்ட குழுவினர், அவாங்கை அந்த சிகரத்திலிருந்து நான்காவது முகாமிற்கு கொண்டு வந்து, அவசர சிகிச்சை உதவியை வழங்கிய போது அவர் இறந்து விட்டது உறுதிபடுத்தப்பட்டது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


