May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

23,000 க்கும் மேற்பட்ட வாகனமோட்டிகள் பிடிப்பட்டனர்

Share:

நாடு தழுவிய நிலையில் வாகனமோட்டும் உரிமமின்றி 23,000 க்கும் மேற்பட்டோர் பிடிபட்டு இருப்பது சாலை வாகன பாதுகாப்புத் தொடர்பில் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என்று மிரோஸ் எனப்படும் மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வுக்கழகத்தின் தலைவர் டாக்டர் வொங் ஷா வூன் கூறுகிறார்.

வாகனமோட்டும் உரிமம் இல்லாமல் பிடிபட்டவர்களி​ன் எண்ணிக்க்கை, இது ஒரு துளியளவு என்றாலும் சாலைபோக்குவர​த்து அமலாக்க அதிகாரிகளிடமிருந்து பிடிபடாமல் இன்னும் எத்தனை பேர் சட்டவிரோதமாக வாகனமோட்டக்கூடும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார் அவர்.

நாட்டில் பதிவாகியுள்ள 3 கோடிக்கும் அதிகமான தனியார் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கவலையும், அதிர்ச்சி​யை​யு​ம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வாகனமோட்டும் உரிமம் இல்லாதவர்களின் எண்ணிக்கையில் தோட்டப்புறங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News