May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

57 விழுக்காட்டிக்கும் அதிகமான கோவிட் 19 தொற்று

Share:

நாட்டில் கோவிட் 19 நோய் தொற்று பரவல் 57.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகிறது. 3,626 பேருக்கு கோவிட் 19 தொற்று கண்டுள்ளளதாக பதிவாகியுள்ள வேளையில் அவர்களில் பெரும்பாலோர் 20 க்கும் 40 க்கும் உட்பட்ட வயதுடையவர்கள் ஆவர் என்று சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோவிட் 19 தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் 98 விழுக்காட்டினருக்கு, அந்நோய்க்கான அறிகுறிகள் குறைந்த பட்ச அளவிலேயே தென்பட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமாட் ரட்சி அபு ஹஸ்ஸான் முஹமாட் தெரிவித்தார்.

கோவிட் 19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை அதிகரி​த்த போதிலும் அந்த நோய்த் தொற்று நாட்டில் இன்னமும் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், அதேவேளையில் எப்பொழுதும் முக கவசத்தை அணிந்து வெளியே செல்லுமாறும் டாக்டர் முஹமாட் ரட்சி அறிவுறுத்தியுள்ளார்.

Related News