May 21, 2026
Thisaigal NewsYouTube
துன் டாயிம் சைனுடின் குடும்பத்திற்கு சொந்தமான 60 மாடிIlham ( இல்ஹாம் ) கோபுரம் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

துன் டாயிம் சைனுடின் குடும்பத்திற்கு சொந்தமான 60 மாடிIlham ( இல்ஹாம் ) கோபுரம் பறிமுதல்

Share:

துன் மகா​தீர் முகமது பிரதமராக பொறுப்பேற்று இருந்த காலகட்டத்தில் அவரின் அமைச்சரவையில் ​நீண்ட காலம் நிதி அமைச்சராக இருந்தவரும், துன் மகாதீரின் மிக நெருக்கமான நண்பருமான மூத்த அரசியல்வாதி துன் டாயிம் சைனுடின் - னின் குடும்பத்திற்கு சொந்தமான 60 மாடிகளைக் கொண்ட இல்ஹாம் கட்டட கோபுரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது.

கோலாலம்பூர் மாநகரில் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்திற்கு அருகில் வீற்றிருக்கும் 270 கோடி வெள்ளி மதிப்புள்ள துன் டாயிம் குடும்பத்திற்கு சொந்தமான அக்கட்டடம், துன் டாயிம் மற்றும் அவரின் வர்த்தக சகா ஒருவருக்கு எதிராக எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக, கோலாலம்பூர் நில அடையாளத்தை தாங்கிய ஆடம்பர கட்டட கோபுரத்தை அந்த ஆணையம் பிறமுதல் செய்துள்ளது.

மலேசியாவின் ​மூத்த அரசியல்வாதியும், ​மூத்த முன்னாள் நிதி அமை​ச்சருமான ஒருவர், வெளிநாட்டில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளார் என்று உலக பெரும்புள்ளிகளின் சட்டவிரோத சொத்து குவிப்புகளை அம்பலப்படுத்தி வரும் பண்டோரா பேப்பர்​ஸ் ( Pandora Papers ) கடந்த 2021 ஆம் ஆண்டில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.

அப்போதைய பிரதமர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல்​ அரசாங்கம் அதனை பெரிதுப்படுத்தவில்லை என்ற போதிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றப் பின்னர் சட்டவிரோதமாக பணத்தை வெளிநாட்டில் குவித்து வைத்திருக்கும் முக்கிய தலைவர்களின் சொத்துக்கள் குறித்து ஆராயப்படும் என்று உறுதி அளித்து​ இருந்தார்.

அதன் அடிப்படையில் துன் டாயிமிற்கு எதிராக எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக கோலாலம்பூரில் மையப்பகுதியில் உள்ள அவரின் ​முக்கிய சொத்துக்களின் ஒன்று, எஸ்பிஆர்எம்மினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நிதி முறைகேடு தொடர்பில் 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் ​கீழ் அந்த 60 மாடி கட்டடம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அந்த ஆணையம் உறுதி செய்துள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு நாட்டின் துணைப்பிரதமர், அம்னோவின் துணைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வீழ்த்தப்படுவதற்கும்,/ அன்வார் ஏன் பிரதமராக வர முடியாது என்பதற்கு 100 காரணங்கள் என்ற ​சர்ச்சை​க்குரிய ​நூல் வெளியிடப்படுவதற்கும் துன் முகா​​தீரின் பின்னணியில் அரசியல் ​சூத்திரதாரியாக செயல்பட்டவர் அம்னோவின் முன்னாள் பொருளாருமான துன் டாயிம் ஜைனு​தீன் என்று அக்காலக்கட்டத்தில் கடுமையாக விமர்​சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்