May 20, 2026
Thisaigal NewsYouTube
அதிகமானோருக்கு பால்வினை நோய்
தற்போதைய செய்திகள்

அதிகமானோருக்கு பால்வினை நோய்

Share:

திரெங்கானு மாநிலத்தில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களே அதிகளவில் பால்வினை நோய்க்கு ஆளாகி வருவது தெரியவந்துள்ளது என்று லாடாங் சட்டமன்ற உறுப்பினர் சுரைடா முஹமாட் நோர் தெரிவித்துள்ளார்.

கோலத் திரெங்கானு, சுல்தானா நோர் சஹிரா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள புள்ளி விவகரங்களின்படி 18 க்கும் 24 க்கும் இடைப்பட்ட வயதுடைய அதிகமான ஆண்களே இந்த நோய்க்கு ஆளாகி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளதாக இன்று திரெங்கானு சட்டமன்றத்தில் அந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

இதன் தொடர்பில் பால்வினை நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிகமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை திரெங்கானு மாநில அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News