இந்தியாவில் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளதால் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது.
இந்திய மத்திய வங்கி, நேற்று இரவு அதிரடியாக வெளியிட்ட இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவின் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்கள் பதற்றம் அடைய வேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இந்தியாவின் வங்கிகளில் மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் மத்திய வங்கி காலக்கொடு நிர்ணயித்துள்ளது. அதேவேளையில் மலேசியர்கள் அந்த ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை பண மாற்றும் கடைகளில் மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பண நோட்டுகளில் மிக உயர்ந்த மதிப்பான ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


