ஜொகூர், குளுவாங், ஜாலான் செலர் தமன் இல்ஹாம் சாலையில் நேற்றிரவு இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்ட சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் உயிர் இழந்ததுடன் அவனது தாயாரும், மூத்த சகோதரரும் படுங்காயத்திற்கு உள்ளாகினர்.
கடும் காயங்களுக்கு ஆளாகிய 5 வயது சிறுவன் நோர் ரஹில் ரைஹான் முகமது ஷாருல் சிகிச்சை பலனின்றி குளுவாங் என்சே' பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கம்போங் பாயா விலிருந்து தாமான் இல்ஹாம் மிற்கு தன் இரு பிள்ளைகளுடன் நாசா ரியா ரக காரில் சென்ற மாது, வேக கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த புரோட்டான் வீரா ரக காரில் மோதியதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.
இவ்விபத்தில் 34 வயதுடைய ஆயிஷா முகமது சலே என்ற அந்த மாதுவும், அவரின் எட்டு வயது மூத்த மகன் நோர் இசுல் இஸ்லாம் முகமது ஷாருலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏசிபி பஹ்ரின் முகமது நோ குறிப்பிட்டார்.








