May 20, 2026
Thisaigal NewsYouTube
கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி
தற்போதைய செய்திகள்

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

Share:

மலேசியாவிலிருந்து ஏற்கனவே நாடுகடத்தப்பட்டு, கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ஆடவர் உட்பட 5 பேரை கெடா மாநில குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பாடாங் செராயில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த ஆடவர், அதிகாரிகளின் கண்காணிப்பைத் தவிர்த்து அதிகாரப்பூர்வமற்ற வழிகள் மூலம் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைந்து, சில மாதங்களாகச் சட்டவிரோதமாக வேலை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மாநில குடிநுழைவுத் துறை தலைமை அதிகாரி முகமாட் ரிட்சுவான் பின் முகமாட் ஜென் தெரிவித்தார்.

இந்த நபருக்கு உதவிய உள்ளூர் நபர்கள் அல்லது மனிதக் கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தற்போது இக்குற்றச் செயல்கள் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக முகமாட் ரிட்சுவான் குறிப்பிட்டார்.

Related News