May 20, 2026
Thisaigal NewsYouTube
கீழ்ப்பேரா மாவட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பட்டமளிப்பு விழா
தற்போதைய செய்திகள்

கீழ்ப்பேரா மாவட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பட்டமளிப்பு விழா

Share:

அண்மையில் தெலுக் இந்தானில் ஷாய்னிங் ஸ்டார்ஸ் குழுவின் ஏற்பாட்டில் இங்குள்ள பூங்கா ராயா மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்தது கல்விக் கருத்தரங்குடன் கூடிய பிரமாண்ட பட்டமளிப்பு விழா.

2 நாட்களுக்கு நடைபெற்ற விழாபில் பல்வேறி அங்கங்கள் கொண்ட கருத்தரங்கும் பட்டமளிப்பு விழாவும் நடந்தது.

ஷாய்னிங் ஸ்டார்ஸ் குழுவின் தலைவர் மாஸ்டர் உகான்தருண் சுகுமார் ஏற்பாட்டில் முதன் முறையாக தமிழ்ப்பள்ளி மாணவர்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் கீழ்ப்பேரா மாவட்டத்திலிருந்து 9 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் 2022ஆம் ஆண்டு அனைத்துலக, தேசிய, மாநில நிலைகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.

SHINING STARZ குழுவின் தலைவர் மாஸ்டர் உகான்தருண் சுகுமார், தமது உரையில் இது போன்ற நிகழ்வு தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து பள்ளிகளும் குறிப்பாக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் நல்லுரையாளர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related News