May 21, 2026
Thisaigal NewsYouTube
இரசாயன கழிவுகளை அகற்றும் மையத்தை உருவாக்குங்கள் !
தற்போதைய செய்திகள்

இரசாயன கழிவுகளை அகற்றும் மையத்தை உருவாக்குங்கள் !

Share:

ஆறு, கடல் மாசுபாட்டைத் தவிர்க்க தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகளை அகற்றும் மையத்தை ஜோகூரில் உருவாக்க வேண்டும் என பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஸ்ஸான் அப்துல் கரிம் வலியுறுத்தினார்.

நவீனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கழிவு சுத்திகரிப்பு மையத்தை பாசிர் குடாங்கிலோ அல்லது பெங்கெராங் இலோ கட்டப்பட வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல், வானிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் இடம், தாம் னிப்பட்ட முறையில் இப்பிரச்சனை குறித்து முன்னரே பேசி இருப்பதாகவும், குறிப்பாக சுங்கை கிம் கிம் சம்பவம் போன்று மீண்டும் நிகழாமல் இருக்க இரசாயனக் கழிவு சுத்திகரிப்பு மையம் தேவை என்பதை அவரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அந்த சுத்திகரிப்பு மையம் கட்டப்படுமேயானால், இரசாயனக் கழிமுகள் முறையாகக் கையாளப்படும். மேலும், நெகிரி செம்பிலான் மாநிலம் வரை கழிவுகளைக் கொண்டு செல்லும் செலவும் குறைக்க முடியும.

Related News