பரபரப்பான வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்ய இயலாத இந்தியப் பெண்கள், ஆரோக்கியத்தைப் பேண எளிய வழி இதோ! தங்களுக்குப் பிடித்தமான பாடலுக்கு வீட்டிற்குள்ளேயே ஒரு ஆட்டம் ஆடுவதன் மூலம் உடல் நலத்தைப் பாதுகாக்க முடியும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார் 63 வயதான திருமதி அஞ்சலைதேவி. மூன்று பிள்ளைகள் மற்றும் 7 பேரக்குழந்தைகளின் பாட்டியான இவர், வயது தடையில்லை என்பதைத் தன் நடன உடற்பயிற்சி மூலம் நிரூபிக்கிறார்!"
தாம் பயணம் செய்யும் நாடுகளில் உள்ள அனைத்துலக விமான நிலையங்களிலும் இத்தகைய விழிப்புணர்வை அஞ்சாநெஞ்சோடு ஏற்படுத்தி வருகிறார் கோலாலம்பூர் கெப்போங்கைச் சேர்ந்த இந்த ஆளுமை.
இந்தியப் பெண்களின் உடல் ஆரோக்கிய வழிகாட்டியாகத் திகழும் அஞ்சலைதேவியை, உலக அரங்கில் மலேசியாவின் ஒரு 'குட்டி நடனத் தூதுவர்' என்று தாராளமாகக் கூறலாம்!"








