தாங்கள் சார்ந்துள்ள கட்சியை விட்டு விலகாமலேயே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அம்னோ, பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கவில்லை என்றால் நடப்பு அரசாங்கம் கவிழலாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் பெர்சத்து கட்சியை சேர்ந்த 5 எம்.பி.க்கள், தங்கள் கட்சியை விட்டு விலகாமல், அன்வாருக்கு எவ்வாறு ஆதரவு நல்கினார்களோ அதேபோன்று அம்னோ, பிகேஆர் கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள், அன்வாரை ஆதரிக்காத நிலை ஏற்பட்டால் அரசாங்கம் கவில்வது திண்ணம் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
முகைதீனின் அரசாங்கம் கவிழ்ந்ததற்கு 15 அம்னோ எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை மீட்டுக்கொண்டதால் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்திருந்ததை துன் மகாதீர் சுட்டிக்காட்டினார்.








