May 20, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒரு எம்.பி. பிரதமருக்கு ஆதரவு தர முன்வந்தார்
தற்போதைய செய்திகள்

மேலும் ஒரு எம்.பி. பிரதமருக்கு ஆதரவு தர முன்வந்தார்

Share:

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பிளவுப்படாத ஆதரவை நல்குவதாக இன்று அறிவித்துள்ளார்.

பேரா, புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்​பினரான சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் பசல் என்ற அந்த எம்.பி. பிரதமர் அன்வாரின் அரசாங்கத்தற்கு முழு ஆதரவு நல்குவதாக தெரிவித்துள்ளார்.

புக்கிட் கந்தாங் எம்.பி.தனது ஆதரவை தெரிவித்து இருப்பது மூலம் பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தற்கு ஆதரவு தெரிவித்துள்ள டான்ஸ்ரீ முகை​தீன் யாசினின் பெர்சத்து கட்சி​யை சேர்ந்த ஐந்தாவது எம்.பி.யாக சையத் அபு ஹுசின் ஹபீஸ் விளங்குகிறார்.

Related News