May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கை ரேகையை அரசாங்கம் எடுத்துக் கொள்ள எண்ணம் இல்லை !

Share:

பல சமூக ஊடகத்தினரால் சொல்லப்படுவது போல், தேசிய இலக்கியவியல் அடையாளத் திட்டத்தின் கீழ் மக்களின் கை ரேகையை அரசாங்கம் எடுத்துக் கொள்ளவோ பயன்படுத்தவோ எண்ணம் கொண்டிருக்கவில்லை என தொடர்பு, இலக்கவியல் அமைச்சர்
ஃபஹ்மி ஃபட்சில் தெளிவு படுத்தினார்.

இந்தத் திட்டம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைத் தொடர்ந்து, பல வித சமூக ஊடகங்களில் அந்தத் திட்டம் குறித்து பல்வேறு தவறான,, போலியான கருத்துகள் உலா வருவதாக அவர் கூறினார்.

இந்தத் திட்டம் MIMOS இன் கீழ் இருந்தாலும், இந்தத் தருணத்தில், மக்களின் கை ரேகையை அரசாங்கம் எடுத்துக் கொள்ளவோ பயன்படுத்தவோ எண்ணம் கொண்டிருக்கவில்லை எனவும் இந்த டிஜிட்டல் ஐடி ஒற்றை அடையாளமாகும், இதைத்தான் நாங்கள் மக்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கிறோம் எனவும் அவர் விளக்கினார்.

கை ரேகையின் வழி தேசியப் பதிவிலாகாவிடம் உள்ளத் தகவலை மட்டுமே சேமிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

Related News