May 21, 2026
Thisaigal NewsYouTube
ஆகஸ்ட் 17 ஆம் தேதி மெர்டேக்கா அரங்கம் பயன்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

ஆகஸ்ட் 17 ஆம் தேதி மெர்டேக்கா அரங்கம் பயன்படுத்தப்படும்

Share:

2024 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் சுல்தான் கிண்ண கால்பந்தட்டப் போட்டிக்கு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மெர்டேக்கா அரங்கம் பயன்படுத்தப்படும் போது நாட்டின் கால்பந்தாட்டப் பெருமையை மீட்டெடுப்பதைப் போன்ற உணர்வை ரசிகர்கள் பெற முடியும் என்று அந்த கால்பந்தாட்டப் போட்டியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் கரிம் மினிசார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மாநில அளவிலும், தேசிய அளவிலும் கால்பந்தாட்ட ஜாம்பான்களை உருவாக்கிய தனித்துவமான பெருமையை கொண்ட அரங்கமாக மெர்டேக்கா ஸ்டேடியம் விளங்குகிறது.

மறைந்த டத்தோ மொக்தார் டஹாரி, டத்தோ ஆர். ஆறுமுகம், டத்தோ சந்தோக் சிங், டத்தோ சோ சின் ஆன் போன்ற மலேசிய கால்பந்தாட்ட ஜாம்பாவான்களின் அன்றைய பெருமையை கால்பந்தாட்ட ரசிர்களின் நினைவுக்கு கொண்டு வருவதற்கு சிலாங்கூர் சுல்தான் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு மெர்டேக்கா அரங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அப்துல் கரிம் குறிப்பிட்டார்.

Related News