May 21, 2026
Thisaigal NewsYouTube
செந்தூலில் மோதல்: சமூக ஊடகங்களில் வைரலான சண்டைக் காணொளி; நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

செந்தூலில் மோதல்: சமூக ஊடகங்களில் வைரலான சண்டைக் காணொளி; நால்வர் கைது

Share:

கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் ஆடவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் வன்முறைச் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இணையத்தில் பரவி வரும் அந்தக் காணொளியில், ஆடவர்கள் குழு ஒன்று கூச்சலிட்டு, ஒருவரையொருவர் பலமாகத் தாக்கிக் கொள்வதும், அதில் ஒருவர் தரையில் அழுத்திப் பிடிக்கப்பட்டிருப்பதும் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து, செந்தூல் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஜாஸ்னி ஜோல்பா தெரிவித்தார்.

இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இந்த மோதலுக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் மேலும் விளக்கினார்.

Related News