May 21, 2026
Thisaigal NewsYouTube
துபாய் நகர்வு சாத்தியமாகலாம், கெடா மந்திரி பெசார்
தற்போதைய செய்திகள்

துபாய் நகர்வு சாத்தியமாகலாம், கெடா மந்திரி பெசார்

Share:

நடப்பு அரசாங்கத்தை கவிழ்க்கும் துபாய் நகர்வு, சாத்தியமாகலாம் என்று கெடா மந்திரி பெசார் முகம்மட் சனுசி முகம்மட் நோர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

எனினும் துபாய் நகர்வு, எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான துல்லியமான விவரங்களை தம்மால் வெளியிட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிக் கவிழலாம் என்று சொந்த நிழலைப் பார்த்து ஒற்றுமை ரசாங்கத் தலைவர்கள் தற்போது பயந்து கெண்டு இருப்பதாக சனூசி குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதன் மூலமாக அரசாங்கம் கவிழும் சாத்தியம் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வியூகம், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என்று சனூசி குறிப்பிட்டார்.

பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த ஐந்து எம்.பி.க்களை ஆதரவை பெறுவதற்கு மடானி அரசாங்கம் எவ்வாறு கட்சித் தாவல் சட்டத்தை பயன்படுத்தியோ அதே வியூகத்தை அடிப்படையாக கொண்டு பெரிக்காத்தான் நேஷனல் தற்போது காயை நகர்த்தி வருவதாக சனூசி தெரிவித்தார்.

Related News